ரஜினி - மணிரத்னம் காம்போவின் ‘தளபதி’ மறக்க முடியாத படைப்பு... ஏன்?
சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன.
சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன. ஏற்கெனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது.
மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும், மம்மூட்டி துரியோதனன் என்றும், அரவிந்தசுவாமி அர்ஜுனன் என்றும் பாத்திரங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மனதில் உருவாக்கப்பட்டுவிட்டன. ரஜினி முதல்முதலாக இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்படத்தின் பூஜை அன்று ரஜினி, இளையராஜா, மம்மூட்டி மூவருக்கும் வீரவாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. பனியன்கள், தொப்பிகள், கீ செயின்கள் இப்படத்தின் பெயரில் வெளியானது. தளபதி பெயர், சம்பிரதாய எழுத்துருக்களைப் பயன்படுத்தாமல் நவீன வடிவத்தில் எழுதப்பட்டுப் பெரும் வரவேற்பையும் பெற்றது.