ஹாலிவுட் படத்தில் மீண்டும் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

ஹாலிவுட் படத்தில் மீண்டும் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

அடுத்து, ரூசோ சகோதரர்கள் இயக்கிய ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்தார். இவர்கள் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது.