எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் வலியுறுத்தல்
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை, எர்ணாவூரில் இன்று (டிச.20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர், இணை சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகவ மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், அனல்மின் திட்ட விரிவாக்கம் தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் விளக்கியதாவது: