புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை
புதுச்சேரியில் தொடர் மழை பொழிவதால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழை பொழிவதால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை, தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஒரு வாரமாக புதுவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புதுவையில் மிதமான மழை பெய்து வருகிறது.