நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.