“பாராளுமன்றத்தில் பேசினால் கூட ராகுல் மீது வழக்கு போடுவார்கள் போல” - திருநாவுக்கரசர் கருத்து
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை (டிச.20) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை (டிச.20) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் மாநகர் எல்.ரெக்ஸ், தெற்கு கோவிந்தராஜ், வடக்கு கலை, மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மண்டல பொறுப்பாளர் பெனட் அந்தோணிராஜ், திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தெய்வேந்திரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.