தமிழர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை - பினாங்கு இடையே நேரடி விமான சேவை இன்று தொடக்கம்
மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது. அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.
சென்னை: சென்னை - பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொடங்குகிறது. மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.
அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.