ரஜினியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது: மோகன்லால் பகிர்வு

ரஜினியுடன் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்ததாக மோகன்லால் தெரிவித்துள்ளார். 

ரஜினியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது: மோகன்லால் பகிர்வு

ரஜினியுடன் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்ததாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால் இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வருகிறார். நேற்று மாலை சத்யம் திரையரங்கில் தமிழ் திரையுலகினருக்கு பிரத்யேக திரையிடல் ஒன்று நடைபெற்றது.

‘பரோஸ்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியிருக்கிறார் மோகன்லால். அதில் “ரஜினி சாருடன் நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் பணிபுரிந்துள்ளேன்.