“இந்தியா யாருடைய சொத்தும் அல்ல” - கான்சர்ட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து தில்ஜித் தோசன்ஜ்

இந்தூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு எதிராக பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், “இந்தியா யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” என பாடகர் தில்ஜித் தோசன்ஜ் தெரிவித்துள்ளார். 

“இந்தியா யாருடைய சொத்தும் அல்ல” - கான்சர்ட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து தில்ஜித் தோசன்ஜ்

இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாடகர் தில்ஜித்தின் இசை நிகழ்ச்சிக்கு எதிராக பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், “இந்தியா யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” என தில்ஜித் தோசன்ஜ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபி மற்றும் இந்தியில் பாடி புகழ்பெற்றவர் பாடகர் தில்ஜித் தோசன்ஜ். இவரது இசை நிகழ்ச்சி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு மறைந்த இந்தூரைச் சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரிக்கு இந்த கச்சேரியை அர்பணிப்பதாக தில்ஜித் அறிவித்திருந்தார்.