கோவை | வனத்தையொட்டிய குப்பைக் கிடங்கு - பிளாஸ்டிக் பைகளை தின்னும் யானைகள், மான்ம்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அதிகளவில் யானைகள், காட்டுமாடுகள், சிறுத்தை, மான்கள், காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. மேலும் தமிழகத்திலேயே மனித-வன உயிரின முரண்பாடு அதிகமுள்ள பகுதியாகவும் அறியப்படுகிறது.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அதிகளவில் யானைகள், காட்டுமாடுகள், சிறுத்தை, மான்கள், காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. மேலும் தமிழகத்திலேயே மனித-வன உயிரின முரண்பாடு அதிகமுள்ள பகுதியாகவும் அறியப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை கிராம பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் வன உயிரினங்கள் குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும் புகுந்து வருகின்றன. ஓராண்டுக்கு தோரயமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமாக யானைகள் வெளியேறி வருவதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.