மொழிபெயர்ப்புகள் தமிழ்க் கவிதைகளின் எல்லையை விரிக்கக்கூடியவை: கவிஞர் க.மோகனரங்கன் நேர்காணல்

இதே தன்மையிலானவை இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள். நவீன கவிதை சூடிக்கொள்ள வேண்டிய வசீகரத்தை உணர்த்தும் விதமாகத் தொடர்ந்து ஆங்கிலத்திலிருந்து கவிதைகளை மொழிபெயர்த்துவருகிறார்.

மொழிபெயர்ப்புகள் தமிழ்க் கவிதைகளின் எல்லையை விரிக்கக்கூடியவை: கவிஞர் க.மோகனரங்கன் நேர்காணல்

க.மோகனரங்கன், தமிழ்க் கவிதையியலில் எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தீவிரமாக இயங்கும் நவீனக் கவிஞர். ‘நெடுவழித்தனிமை’, ‘மீகாமம்’, ‘கல்லாப் பிழை’, ‘இடம்பெயர்ந்த கடல்’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். இவரது கவிதைகள், எளிமையின் அழகை ஒருபடி உயர்த்திக் காட்டுபவை. இதே தன்மையிலானவை இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள். நவீன கவிதை சூடிக்கொள்ள வேண்டிய வசீகரத்தை உணர்த்தும் விதமாகத் தொடர்ந்து ஆங்கிலத்திலிருந்து கவிதைகளை மொழிபெயர்த்துவருகிறார்.

‘இதயங்களின் உதவியாளர்’ என்கிற தலைப்பில் ரூமியின் கவிதைகளை மோகனரங்கன் மொழிபெயர்த்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. (நூல்வனம் - சென்னைப் புத்தகக் காட்சி அரங்கு எண்: 112)