ரயில்வே புதிய கால அட்டவணையில் அந்த்யோதயா ரயில் நேரத்தை மாற்ற கோரிக்கை
விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை தள்ளிவைக்கப்பட்டு, வரும் ஜன.1-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவாக செய்து வருகின்றனர்.